Wednesday, November 7, 2018

அன்பு மகள்

அன்பு மகளே!
தேவதையாக வந்தாய்!
தேனாய் இனித்தாய்!
பாசம் தந்தாய்
நேசத்தை ஊற்றினாய்
பரிவை வளர்த்தாய்
அன்பிற்கு அடையாமாக
அடைமொழியானாய்
உந்தன் பெயரைச்
சொன்னாலே உதடுகளில்
புன்னகை பூத்திடுது

சேயாகப் பிறந்தாயே எந்தன்
தாயாக வளர்ந்தாயே
உனக்கு சேவகம் செய்திடவே
யாசகம் செய்தேனோ
உன் தேவை யாவும்
நிறைவேற்றிடும் சேவகியாகவே
மாறிட தவமதனை செய்தேனோ

உன் கண் அசைவில்
கட்டளை இடு
என் சிரம்
அடிபணியும் என் செல்லம்
இவள் பாதங்களில்

அன்பு கட்டளைகளுக்கு
அந்த விண்மின்களும் தரை இறங்கும்
உந்தன் பாசம் சுவைத்திடவே

நீ வாடி நின்றால்
உள்ளம் தான் தாங்காதே!
நீ ஓடி வந்தது
அணைத்திட்டால் எந்தன்
இன்பம் என்றும் விலகாதே !

நீ கோபம் கொண்டு
முகத்தை திருப்பிக் கொண்டால்
என்ன செய்வேன் என் மகளே
உன்னைச் சிரிக்க வைக்க
முழு முட்டாளாக ஆவேனே!

காலமெல்லாம் நீ சிரிக்க
அதைக் கண்டு நான் ரசிக்கவும்
கண்ணீரை நான் மறைத்து
உன்னோடு சிரிப்பேனே!

பறவைகள் போலே
நீயும் சிறகடித்து பறந்திடு!
அந்த நிலவினைப் போலே
நீயும் புன்னகையில் ஒளி வீசிடு!

நீ காட்டும் அன்பிற்கும்
விண்ணிற்கும் இல்லையே எல்லை !
எந்த பிறவியில் ஏது பணி செய்து
இந்த ஜென்ம பந்தத்தின்
கடனை நானும் தீர்ப்பேனோ?
உலகம் உறவாக கொண்டேன்
இன்று உலகமே நீ என்று வந்தேன்
உணராத அன்பை உணர்ந்தேனே
உனக்குள்ளே எனக்காக
என் தேனே செந்தேனே
என் உயிர் நீ தானே
உறவானாய் உயிரானாய்
உறவுக்கு உயிரானாய்
என் உயிரே எனக்குள்ளே
எந்நாளும்

உனக்குள் வாழும்
என்னை என் உயிர்
இந்த உடல் பிரிந்தாலும்
நான் வாழ்வது நிச்சயம்

நண்பர்கள்

ஆயிரம் சொந்தம் நம்மை தேடி வரும்...
ஆனால் தேடினாலும் கிடைக்காத ஒரே சொந்தம் நல்ல "நண்பர்கள்"
எனக்கு கிடைத்த உன் நட்பு போல, அந்த வானத்துக்கும் உன்னுடைய நட்பு கிடைக்கவில்லை என்று வானம் சிந்தும் கண்ணீர் தான் மழை.
என்னோடு நீ இருந்தாலும் இல்லை என்றாலும் - நான்
மண்ணோடு புதையும் வரை...
நெஞ்சோடு வைத்திருப்பேன் உன் நட்பை...
"சிறகு கிடைத்த உடன் பறப்பது அல்ல நட்பு... சிலுவை கிடைத்தாலும் சுமப்பது தான் நட்பு"

நம் நட்பை ஓவியமாய் வரைய நினைத்தேன்..
ஆனால் முடியவில்லை.
ஏன் தெரியுமா?
ரோஜாவை வரைந்து விடலாம்.
அதன் வாசத்தை எப்படி வரைய முடியும்?
வானமும் பூமியும் இறைவணின் சொத்து,
இன்பமும் துன்பமும் மனிதரின் சொத்து,
நீயும் நானும் கடவுளின் படைப்பு,
என்றும் பிரிய கூடாது "நம் நட்பு'

"கண்ணில் ஒரு மின்னல்"
"முகத்தில் ஒரு சிரிப்பு"
"சிரிப்பில் ஒரு பாசம்"
"பாசத்தில் ஒரு நேசம்"
"நேசத்தில் ஒரு இதயம்"
அந்த "இதயத்தில் என் நண்பன்/தோழி நீ"
நட்பிலும் பிரிவா?

காரணம் இன்றி பிரிதலும் – பின் உணர்ந்து
தோள்  சேர்தலும் நட்பில் மட்டும் சாத்தியமா?
பிரிவு தான் அன்பின் ஆழத்தை அழக்குமா?
நட்பு அன்பின் ஆழத்தை அழக்காதா?

என் நீண்ட நாள் நட்பில் வந்த
பிரிவு  குறுகியதல்லவே
நீதானே என் உயிரினும் மேலான
ப்ரியசகி அல்லவோ

என் நீண்ட மௌனம்
என் பிரிவை உனக்குச் சொல்லும்
உன் நீண்ட மௌனம்
உன் பிரிவால் எனை வாட்டும்!
அன்று நீ எனை விட்டுப் பரிந்தாய்
என் தோழமை மறக்காது சென்றாய்
அந்த பரிவால் நான் பட்ட வேதனை – அம்மம்மா
உன் உயிரை நாடி மீண்டும் வந்தேன்
உன் வாழ்விற்குள்

கடல்கள் நமை பிரித்தாலும்
வானம் நமை பிரித்தாலும்
இயற்கையும் சூழ்நிலையும் பிரிந்தாலும்
நம் எண்ணங்கள் ஒன்றல்லவா
அதில் பிரிவேது தோழி

நாம் எங்கிருந்த போதும்
நம் நட்பில் பிரிவேது
பிறர் நம் நட்பில் கண்வைத்த போதும்
நம் நட்பில் பிரிவேது
நம் நட்பிலும் பிரிவு
இது சாத்தியமா?
சொல்வாய் என் உயிர்த் தோழி

தோழா .......
அனைத்தும் சொன்னேன்
ஒன்றை மட்டும் விட்டுவிட்டு
உன் மடியில்
தலை சாய்க்க வேண்டும் என்று
அம்மா வயிற்றில் சுமந்தால்
அப்பா தோளில் சுமந்தார்
காதலி இதயத்தில் சுமந்தால்
நண்பா
நான் உன்னை சுமக்கவில்லை
ஏனென்றால் நட்பு ஒரு சுமையல்ல

நிழல் கூட மாலை நேரத்தில் பிரியும்
என் நினைவுகள் உன்னை விட்டு என்றும் பிரியாது

மரணமே வந்தாலும் உன்னை மறக்காத இதயம் வேண்டும்
மீண்டும் ஜனனம் என்றால் அதில் நீயே வேண்டும்
உரவாக அல்ல என் உயிர் நட்பாக

புரியாத நட்புக்கு அருகில் இருந்தாலும் பயனில்லை
புரிந்த நட்புக்கு பிரிவு ஒரு தூரமில்லை

நம் வெற்றியின் போது கை தட்டும் பல விரல்களை விட
தோள்வியின் போது கை கொடுக்கும் நண்பனின் ஒரு விரலே சிறந்தது
மழலைப் பருவத்தில்
பார்த்து வியக்க
ஒரு நட்பு...

குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாட
ஒரு நட்பு...

காளைப் பருவத்தில்
ஊர் சுற்ற
ஒரு நட்பு...

வாலிபப் பருவத்தில்
பேசி ரசிக்க
ஒரு நட்பு...

முதிர்ந்த பின்
அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்ள
ஒரு நட்பு...

நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை...

தேவையின் போது
தோள்களில் சாய
நட்பு வேண்டும்...

துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க
நட்பு வேண்டும்...

மகிழ்ச்சியின் போது
மனம் மகிழ
நட்பு வேண்டும்...

நானாக நானிருக்க
நட்பே...
நீ எனக்கு
நட்பாக வேண்டும்..
ஆளப்பதிந்த ஈட்டியின் பதிவுகளாய்
கல்லூரித்தாயின் நினைவுகள். – யாரும்
ஓரம்கட்டிவிட முடியாத அந்தப் பசுமையின் உணர்வுகள்.
பட்டப்பெயர் சொல்லி அழைப்பதிலே எமக்கிருந்த
பஞ்சுமிட்டாயின் சுகங்கள்.

கல்லூரியில் எமையாண்ட ராஜாக்கள் காலமது.
அவர்களுக்கு நாம் விட்ட டிமிக்காக்கள் பலவிதம்.
சொல்லில் அடங்காத சிந்தனைச் சிரிப்புக்கள் அவை.
காவ்ரைமோடு களவாக வீடுசென்ற நாட்கள்,
ரிப்போட்டில் போட்ட நண்பனின் திருட்டுக் கையெழுத்து,
மேசையில் எழுதப்பட்டிருந்த நண்பியின் அழியாத பெயர்.
அதற்காய் வாங்கிக்கட்டிய பிரம்படிகள்.
அத்தனையும் சித்தப்பிரமையாய் தித்தித்ததெப்படி?...
விடைகான முடியாத வாலிபலோகம் அது.

சேவிஸ் கிளப், அந்த சைக்கிள் பாக்,
சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ், மதில் மேலிருந்து பார்க்கும்
கிரிக்கட் மெச், பாதி மீதியாய்ப் பகிர்ந்துண்ணும்
உப்புத்தூள் மாங்காயும் கடலை வடையும்
கற்பனைக்குள் அடங்காத அத்தனை சொர்க்கம்.

பரீட்சைக்காலத்தில் உறங்காத இரவுகள்,
நண்பிகளோடு செய்த பந்தயங்கள்,
கால் புள்ளிக்கூட கணக்குப் பார்த்த காலங்கள்.
அத்தனை கெட்டிக்காரர்களும் கெட்டிக்காரிகளும்
ஒன்றாய் இருந்த வகுப்பறைகள். - இப்போ.....
திக்கொன்று திசையொன்றாய்
எட்டமுடியா தூரங்களில் ஒருபுறம்.
களங்களில் ஆடி
காவியமான வீரர்களாய் மறுபுறம்.
அவர்களுக்காய் ஒரு கணம் தலைகுணிந்து மௌனமாகி
தொடர்வோம் வாழ்க்கையின் படிகளை

அப்பா


என் அப்பா

என் முதல் குரல் கேட்டு,
கர்வத்துடன் கனவு
கண்டவர் என் அப்பா !

என் புன்னகை பூப்படைந்தன்று,
தன் கண்ணீரால் ஆயிரம் கவிதை
சொன்னவர் என் அப்பா !

என் பாதங்கள் பூமி தொடும் சோதனை அன்று,
தன் விழி மொழியால்
கட்டளையிட்டவர் என் அப்பா !

என் விழி மூட மறுத்த போது,
தன் மார்பை தலையணையாக்கி,
தம் அறிந்த மொழிகளை
தாலாட்டாக்கியவர் என் அப்பா !

கூட்டத்தின் பிணையில்,
பிணி தொற்றும் என,
தன் தோளில் உயர்த்தி
நகர்வலம் வந்தவர் என் அப்பா !

நான் பேசிய முதல் மழலைத் தமிழே,
தான் கேட்ட ஆகச்சிறந்த
கவிதை என கொக்கரித்தவர் என் அப்பா !

நான் பள்ளியில் பயின்ற
உயிர்ரெழுத்தை நான் கூற,
ஓராயிரம் முறை செவிமடுந்து
ஸ்வரம் அமைத்தவர் என் அப்பா !

நான் சகதியோடும், புழுதியோடும் போர்த்தொடுத்த போது
என் வீரம் கண்டு தன்னைத்தானே
கோழையாக்கிக் கொண்டவர் என் அப்பா!


என் குரல்வளை உடைந்த அன்று
என் சப்தம் அறிய,
தன் குரலை நிசப்தப்படுத்திக்
கொண்டவர் என் அப்பா !

என் வாழ்க்கைகாக
வங்கியின் படி ஏறியபோது,
அதை மறுத்து தன் உறக்கம்
மறந்தவர் என் அப்பா !

என் அறநெறியில்
வழிதவறிய போது,
சக தோழனாய் என்மீது
சாடியவர் என் அப்பா!

நான் ஒரு பிழை
என எண்ணியபோதெல்லாம்,
நம்பிக்கையைக் கொண்டு
என் எண்ணத்தை திருத்தியவர் என் அப்பா!

தன் ஆசைகளை கனவாக்கிக் கொண்டு,
என் கனவுகளை ஆசையாய்
சுமந்த ஒர் உயிர் என் அப்பா !

என் உணர்வுகளுக்கு இன்றுவரை
உயிரோட்டம் தருகின்ற ஒரே ஜீவன்
என் அப்பா !!!!!!!


அன்புள்ள மகன்

வாழ்க்கை

வாழ்க்கையின் பயனுள்ள குறிப்புகள்.

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்

16. யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்

19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்

22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது

அன்பு

அன்பு என்பது நாம் சுவாசிக்கும் மூச்சுக் காற்று போல அவசியமானது.

“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது “

என்பது  வள்ளுவர் வாக்கு.

இல்லறம் நல்லறம் ஆக அன்பு இன்றியமையாதது அன்பினால் கிடைக்கக்கூடிய பலன்கள் எண்ணிலடங்கா. நமது ஆற்றல், மன வலிமை, உடல் வலிமை, அறிவாக்கம் இவற்றுக்கு உறுதுணையா‌க நிற்பது அன்பே.

நமது வாழ்க்கை ஒரு கணித மேடை போன்றது.

நமது நண்பர்களையும், சுற்றத்தாரையும் கூட்ட வேண்டும் (+)

பகைவரை விலக்க வேண்டும் (-)

நமது சந்தோஷத்தைப் பெருக்கி கொள்ள வேண்டும் (X)

நம்முடைய துன்பங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் (%)

நம் வாழ்க்கை என்பது சக்கரம் போன்றது அதில் இறைவனை மையமாகக் வைத்து அன்பை ஆரமாக கொண்டு நாம் வாழ்க்கை  பயணத்தை நடத்த வேண்டும்.

அன்பினால்  தீய குணங்களான கோபம், பொறாமை, அகந்தை ஆகியவை அழிக்கப்படுகின்றன. அன்பு என்ற மூன்றெழுத்தினால் பாசம், பரிவு, உண்மை, பண்பு, கடமை ஆகிய நற்குணங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன.

அன்பினால் சாதிக்க முடியாதது இவ்வுலகில் எதுவுமில்லை என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

மருத்துவம்

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து,

புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது,
ஒருதடவை சொன்னா சொன்னதுதான் ,
இந்த பாடலை ஒவ்வொரு வரும்
எழுதி வைத்து கொள்ளுங்கள்,
எக்காலத்திற்கும் உதவும்,

இப்பாடல் அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டது

சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்  - தமிழ் மருத்துவ அறிவுரைப்பா

மூளைக்கு வல்லாரை
  முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
   எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்
  பசிக்குசீ  ரகமிஞ்சி
கல்லீரலுக்கு  கரிசாலை
  காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை
  காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
  தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்
  நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு  முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய்
  மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு  மருதம்பட்டை
  அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு  எள்ளெண்ணை
  உணர்ச்சிக்கு  நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
   கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகுபட்டை
  களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
  குரலுக்கு  தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை
  வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு  தாமரைப்பூ
  சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

கக்குவானுக்கு வசம்புத்தூள்
  காய்ச்சலுக்கு  நிலவேம்பு                       
விக்கலுக்கு மயிலிறகு
   வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
  நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ
   வெட்டைக்கு சிறுசெருப்படையே

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
  சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
   நஞ்செதிர்க்க அவரிஎட்டி

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
    குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
  பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு  எலுமிச்சைஏலம்
  கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
  ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி
   விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
  புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
  கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
  கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு
   உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
   உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில்
  அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
  அறிந்தவரை உரைத்தேனே!!

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!.